2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றமானது இந்த மாதம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

8ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அக்கிராசன உரையின் பின்னர்  பிற்பகல் 1மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 1 மணிக்கு சபையின் அமர்வு மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

அத்துடன், அண்மையில் காலமான இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற அமர்வுகள் இந்த மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .