2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

7 நாட்களுக்கு முன்னரே தப்பிய கைதி

Editorial   / 2026 ஜனவரி 30 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர் வியாழக்கிழமை (29) மாலை சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தப்பிச் சென்ற நபர் பாணந்துறை, குருப்புமுல்லவைச் சேர்ந்தவர், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

சிறைச்சாலை கண்காணிப்பாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வியாழக்கிழமை (29)  மாலை பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ​​சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றார். இந்த கைதி தனது நன்னடத்தை காரணமாக சுதந்திர தினத்தன்று (பெப்ரவரி 04ஆம் திகதி)  விடுவிக்கப்படவிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X