Editorial / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின், கிளைமோர் குண்டுகளை வெடிக்கவைக்கும் பிரிவைச் சேர்ந்த ஏழு பேருக்கு, தலா 8 வருடங்கள் என்ற அடிப்படையில், 56 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றின் நீதிபதி மஹேஷ் வீரமன், மேற்படி தண்டனை நேற்று (13) விதித்தார்.
வில்பத்து தேசிய வனாந்தரத்துக்கு, விசாரணை ஒன்றுக்காகச் சென்ற வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 7 பேரை ஏற்றிச் சென்ற கெப் வாகனத்தை இலக்குவைத்தே கிளைமோர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.
அங்கிருந்தவர்களை கொலை செய்தமை உள்ளிட்ட 8 குற்றங்களுக்காகவே அவர்களுக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த 7 பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் தனித் தனியாக சுமத்தப்பட்டிருந்த 8 கடுமையான குற்றங்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே இவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைமோர் குண்டுப் பிரிவைச் சேர்ந்த, சிமியோன் சந்திரயோகு, ராகவன், சுரேஸ், புதியவன் சிறில் ராசமணி, சீராலன் சின்னப்பன் பாக்கியநாதன், முத்து மரிக்கார், அப்துல் சலீம எனப்படும் சலீம் ஐயா சாந்தன், ஸ்டெனிஸ் ரெமிஸ்வல்லவன் மற்றும் நடராஜா சரவணபவன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
53 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago