2025 ஜூலை 07, திங்கட்கிழமை

70 பேருக்கு இடமாற்றம் : டிசெம்பர் 7 க்கு முன்னர் முறையிடவும்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் குறித்த இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், டிசெம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு நீதிச் ​சேவைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .