2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

71 சதவீத குடும்பங்கள் உதவி கேட்கும் மனநிலையில் உள்ளன

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபத்தொரு சதவீத குடும்பங்கள் நிவாரண உதவிக்காக விண்ணப்பித்துள்ளதாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை குடும்பங்களில் 71 சதவீத குடும்பங்கள் உதவி கேட்கும் மனநிலையில் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற வறுமையை ஒழிப்பது எங்கள் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உதவியை நம்பி ஒரு குடும்பம் வளர்ச்சியடையாது. நலன்புரி நிதி உதவிகளை வழங்கும் அதே வேளையில், மறுபுறம், சமூகத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X