2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

75 சதவீத விபத்துகளுக்கு இவர்களே காரணம்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துகளில் 75 சதவீதமான விபத்துகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியயவர்கள் ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஏப்ரல் 18ஆம் திகதி பகல் 12 மணியிலிருந்து ​நேற்று (19) காலை 6 மணிவரையான 18 மணி நேர காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது,905 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதிக்குள் வெவ்வேறு  போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில், 6,898 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமாக வீதி சட்டங்களை மீறியமைத்​ தொடர்பில் ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .