Janu / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிட்வா' சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிய அலுவலக ரயில் திங்கட்கிழமை (16) காலை 8.20 மணியளவில் புத்தளத்தை வந்தடைந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளி காரணமாக புத்தளம் - கொழும்பு ரயில் பாதையின் பத்துலுஓயா பாலம் மற்றும் புத்தளம் தில்லையடி சிறிய பாலம் என்பன சேதமடைந்து இருந்ததால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
சுமார் 20 நாட்களுக்கு முன்னரே பாலவி வரையிலான திருத்தப்பணிகள் நிறைவடைந்திருந்த போதிலும், புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன.
எனினும், வழமை போன்று கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு புகையிரதங்கள் வருகை தர ஆரம்பித்துள்ளதால், புத்தளம் புகையிரத நிலையத்திலிருந்து அனைத்து சேவைகளும் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago