2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

FCID க்கு பதிலீடு

Kogilavani   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பதிலாக, நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கு, நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தொழிற்றுறை சார்ந்தவர்களை நியமிப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில், நேற்று புதன்கிழமையன்று (01), சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவானது அரசியல் நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. எனவே, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துடன், குறித்த பிரிவுக்கு பதிலான புதியதொரு பிரிவு நியமிக்கப்பட வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவானது, அரசியல் கட்டளைக்கமையவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தக் கலந்துரையாடலின் போது கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .