2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகின்றனர்

S.Renuka   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை (03) நாட்டிற்கு வர உள்ளது.

இந்தக் குழு,  11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, நாட்டின் அரசியல் மற்றும் நிதி அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளது.

இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (ECF) தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வு பெப்ரவரி 28 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன் நிர்வாகக் குழு 334 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்க முடிவு செய்ததிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் முதல் குழு இதுவாகும்.

இந்த விவாதங்கள், டிசெம்பர் 2024க்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட குறிகாட்டிகள் மற்றும் இலக்குகளை இலங்கை எவ்வாறு அளவு ரீதியாக அடைந்துள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தும்.

கடந்த 2023ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 20ஆம் திகதி அன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இலங்கைக்கு மொத்தம் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க முடிவு செய்தது.

மேலும், நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள் உட்பட 1.34 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .