Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Diving Support Vessel வகைக்குரிய ‘INS NIREEKSHAK’ என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Sailesh Kumar Tyagi கடமையாற்றுகின்றார்.
போர்க்கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவார்கள். இது இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். அத்துடன், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவும் உள்ளனர்.


3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago