2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

KDU சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும்

R.Tharaniya   / 2025 ஜூன் 04 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணிஅமரசூரிய புதன்கிழமை (04) அன்று பாராளுமன்றத்தில்தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சட்ட சீர்திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த, பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய மறைந்த பிரதமர் ஜோன் கொத்தலாவலவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

"முந்தைய அரசாங்கங்கள் தங்கள் விருப்பப்படி ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை (KDU) வை நடத்தி வந்தனர்,"என்று பிரதமர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .