2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

உள்ளகக் கணக்காய்வாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணசபையின் கீழ் உள்ளகக் கணக்காய்வாளர்களாக 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை  எடுக்குமாறு அம்மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கோரிக்கை விடுத்தார்.

2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபையின் வரவு –செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான  குழுநிலை விவாதம் புதன்கிழமை (21) நடைபெற்றது. இதன்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக இருந்த சுமார் 11 பேர் கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமலுள்ளது.    

பிரதேச சபை மற்றும் நகரசபையில்; ஏற்படும் ஊழல் நடவடிக்கைளை இவர்கள் போன்ற உத்தியோகஸ்தர்கள், உள்ளகக் கணக்காய்வைச் செய்து வெளிக்கொணரப் பயன்படுத்தப்பட்டனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் இம்மாகாண முதலமைச்சர்  கவனம் செலுத்தி, அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .