2021 ஜூன் 24, வியாழக்கிழமை

‘சப்பிரிகமக்’ பிரதான கூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி தொடர்பில், திருகோணமலை மாவட்ட சமூக அடிப்படையிலான கிராம அபிவிருத்தித் திட்ட (சப்பிரிகமக்) கூட்டம், திருகோணமலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நாளை மறுதினம் (09)  காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

இதில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலம, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .