2021 ஜூன் 16, புதன்கிழமை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பெற்றோரை அறிவுறுத்தும் கூட்டம்

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக, பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தும் கூட்டம் ஒன்றை ஓகஸ்ட் 19 திகதி நடாத்துமாறு சகல பாடசாலை அதிபர்களையும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்

இது தொடர்பாக, சகல பாடசாலை அதிபர்களுக்கும், வியாழக்கிழமை (21) அவரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில்  மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பாடசாலையில் மும்மொழியப்பட்ட ஆசிரியர்களுக்கு, பரீட்சை நிலையத்துக்கு பரீட்சார்த்திகளை அழைத்துச் செல்வதற்கான சகல பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருப்பதனால், அக்காரியத்தை நிறைவேற்றுவதற்கு பெற்றோர்; ஒத்துழைக்க வேண்டும்.

எக்காரணக் கொண்டும், பரீட்சை நிலையம் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தினுள் அனுமதியின்றி பெறறோர் உள்நுழைய முடியாது.

பரீட்சார்த்திகளுக்குத் தேவையான பேனா, பென்சில்களுக்கான மேலதிகமாக, கோவை, காகிதாதிகள் என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதனால், அவ்வாறான பொருட்களை பிள்ளைகளிடம் கொடுத்துவிட வேண்டாம்.

இடைவேளையின் போது பரீட்சார்த்திகளின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதனால், பரீட்சை நிலைய வளாகத்தில் இருந்து பிள்ளைகள் வெளியேறுவதற்கு இடமளிக்காதிருப்பதோடு, அது தொடர்பில் பரீட்சார்த்திகளைத் தூண்ட வேண்டாம்.

முதலாம் வினாப்பத்திரத்துக்கும் இரண்டாம் வினாப்பத்திரத்துக்கும் இடையிலுள்ள குறுகிய கால இடைவெளியில் பெற்றோர் பாடசாலை வளாகத்துக்குள் நுழைய இடமளிக்கப்படமாட்டாது என்பதனால், பிள்ளைகளுக்குத் தேவையான தண்ணீர் போத்தல் மற்றும் சிற்றுண்டிகளை பரீட்சை நிலையத்துக்குள் நுழைவதற்க முன்பே பிள்ளகைளிடம் கொடுத்துவிட வேண்டும் போன்ற விடயங்களை இக்கூட்டத்தின் போது பெற்றோருக்கு எடுத்துக் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .