2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

பெண்ணின் கையைப் பிடித்திழுத்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் கையைப்பிடித்திழுத்த நபரொருவரை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (19)  உத்தரவிட்டார்.
      
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                       

குறித்த சந்தேகநபர், கல்மெட்டியாவப் பகுதியில் விறகு எடுப்பதாகச் சென்று தனிமையில் இருந்த பெண்ணொருவரின் கையைப் பிடித்திழுத்ததாக, தம்பலகமம் பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (18)  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .