Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் திருகோணமலை அலுவலகத்தினால் கிராம மட்ட சிறுவர் பாதுகாப்பு முறைமை என்னும் திட்டம் ஒன்றினை செயற்படுத்தி வருகின்றது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் ஆண்டான்குளம் என்னும் இடத்தில் அருணலு சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திர கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை காலை அருணலு சிறுவர் கழக கட்டிடத்தில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பட்டணம் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கொத்தலாவல சிறப்பு விருந்தினராக இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறுவர்களின் மனப்பாங்கு விருத்தி மற்றும் ஆளுமை விருத்தி என்பனவற்றை மேம்படுத்துவது தொடார்பான கருத்து வெளிப்பாட்டு சித்திரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
திறமையான ஆக்கங்களை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் திருக்கோணமலை அலுவலக வெளிக்கள இணைப்பாளர் சந்திரகுமார் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மதுபாவனை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் ஒன்றும் இதன்போது அருணலு சிறுவர் கழகத்தினரால் அரங்கேற்றப்பட்டது.
.jpg)
.jpg)
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago