2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

சம்பூர் உப தபாலகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

திருகோணமலை, சம்பூர் உப தபால் நிலையத்தை மூதூர் உப தபால் நிலையத்தின் கீழ் கொண்டுவர  அஞ்சல் திணைக்களம் தீர்மானித்திருப்பது குறித்து சம்பூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

சம்பூர் பிரதேச மக்கள், உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மீள்குடியேற்ற வாய்புகள் இல்லாத நிலையிலேயே அஞ்சல் திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த சம்பூர் பிரதேச இடம்பெயர் நலன்புரிச் சங்கத் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன்,

"தற்போது தற்காலிகமாக சம்பூர் உப தபால் நிலையம் மணற் சேனையில் இயங்குகிறது. இதனை மூடிவிட்டு ஊழியர்களை மூதூர் தபால் நிலையத்தில் கடமையாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் மகா வித்தியாலயம், பொலிஸ் நிலையம் மற்றும் கமநல சேவை நிலையம் ஆகியன கட்டைபறிச்சானில் இயங்குவது போல் சம்பூர் உப தபால் நிலையமும் அங்கு இயங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையும் எதிர்பார்ப்பும்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .