2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவுக்கு மாலை நேர போக்குவரத்து ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகரில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு மாலை நேர போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை, மட்டக்களப்பு ஏ15 வீதியில் கிண்ணியா பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் பின்னர் அதிகளவான மாணவர்கள் தமது உயர் கல்விக்காக  திருகோணமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.

கிண்ணியாவில் இருந்த பெருமளவான மாணவர்கள் நகரப்பாடசாலைகளில் கல்வியைத் தொடர்கின்றனர். அவர்கள் மாலை நேர வகுப்புக்கள் முடிந்து சிரமப்பட்டனர்.

இவ்வாறு திருமலைக்குச் சென்று வரும் மாணவர்களின் பெற்றோர் குழுவொன்று கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் அவர்களை அவரது திருமலை அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதன்போது அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சபை தலைவர் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்பபடுத்தி தருவதாக உறுதியளித்தார்

இதையடுத்து, திருக்கோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு இரவு 7.30 மணிக்கு  புதிய சேவை ஒன்று நேற்று திங்கட்கிழமை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .