2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

வடக்கு  கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் திருகோணமலை அபயபுரம் பகுதியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் உயர்தரம் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு இன்று வியாழக்கிழமை காலை அடிக்கல் நஆட்டி வைக்கப்பட்டது.

15 மில்லியன் ரூபாய் செலவில் 3 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமையப்பெற உள்ளது.

வடக்கு  கிழக்கு சமுதாய மீளமைப்புத் திட்டம் (நிக்கொட்) நிறுவனத்தின் நிதி உதவியுடனும், கிழக்கு மாகாண ஆளுநர் நிதியில் இருந்தும் இக்கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அடிக்கல்லினை நட்டு வைத்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் உபுல் வீரவர்த்தனவும் அடிக்கல்லினை நட்டு வைத்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .