2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மாத்தறை ராகுல வித்தியாலய பழைய மாணவர்களால் கணினி அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளையினர் மூன்று தினங்கள் சுற்றுலா மேற்கொண்டு திருகோணமலை வந்துள்ளனர்.

இவர்கள் வரலாற்று பெருமை மிக்க இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது விஜயத்தின் நோக்கமாக  தமிழ் பாடசாலைகள் இரண்டுக்கு கணினிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

புத்தினிபுரம் சித்தி விநாயகர் வித்தியாலயம், , பட்டிமேடு சாரதா வித்தியாலயம் என்பனவற்றுக்கு இக்கணினிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கொழும்புக் கிளையின் தலைவரும் இலங்கை துறைமுக அதிகாரசபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி  சஞ்சய சேதர செனரத் தலைமையில் 30 அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பங்களும் இச்சுற்றுலாவில் இணைந்து கொண்டனர்.

தென்பகுதியில் மிகவும் பிரசித்தமான பாடசாலையாக எமது கல்லூரி விளங்குகின்றது. 5000 இற்கும் அதிகமானவர்கள் கல்வி பயில்கின்றார்கள். அங்கு வளங்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன.

30 வருட யுத்தத்தின் காரணமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இப்பகுதி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இக் கணினிகளை கையளிக்கும் நிகழ்வில்  கலாநிதி சேதர செனரத் தெரிவித்தார்.

விருந்தினர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .