2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஆசிரிய நியமனம் கோரி திருமலை தொண்டர் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நியமனம் வழங்கக் கோரி இன்று புதன்கிழமை மறியல் போராட்டம் ஒன்றினை நடத்த உள்ளனர்.

கிழக்கு மாகாண  முதல் அமைச்சர் அலுவலகத்தின் முன்னால் இப்போராட்டம் நடைபெற உள்ளதாக சங்கத்தின் தலைவர் ஜெயமோகன்  தெரிவித்தார்.

இம்மாதம்  முதலாம் திகதி மாலை இவ்வாறான மறியல்  போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதன்போது முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  

கடந்த 03ஆம் திகதி  முதலமைச்சரை சந்தித்து  தமது நியமனத்தை கோரியதாகவும் இதன்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகவும் ஜெயமோகன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .