Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி நீல் பூனே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் இன்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல்மொஹான் விஜயவிக்கிரமவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து மாகாண நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் சந்தித்து கலந்துரையாடினர்.
தூதுக்குழுவினருக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும், தேவைப்டும் நிதிகள் பற்றியும் திட்டமிடல் பிரதி செயலாளரால் விளக்கப்பட்டது.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியமும், நிதி வழங்கும் நிறுவனங்களும் தொடர்ந்த ஒத்துழைக்க வேண்டும் எனவும், 5ஆவது நிலையில் அபிவிருத்தியில் இருக்கும் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்கு உதவ வேண்டும் என ஐ.நா. பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .