Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	(எஸ்.எஸ்.குமார்)
	
	தம்பலகாமம், பாரதிபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கால்நடை வைத்திய பரிசோதனை நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
	
	அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவுடன் இணைந்து இதனை திறந்து வைத்தனர். 
	
	திருகோணமலை மாவட்டத்தில் பிரண்தச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 13 வைத்திய பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பெரிய பரிசோதனை நிலையமாக இது விளங்குகிறது. இந்த வைத்தியசாலையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை வழங்கக் கூடியதாக இருக்குமென  நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago