Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மார்ச் 29 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலைகளுக்கிடையே கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியொன்றை மாகாணக் கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் இவ்வாண்டிலும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே கலை, இலக்கியம், ஆக்கத்திறன், கூட்டுமுயற்சி, தொடர்பாடல், தலைமைத்துவம், ஆளுமை, ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதே இப்போட்டியின் நோக்கமாகும்.
இதன் பொருட்டு பாடசாலையொன்றில் ஒரு பிரிவு (வகுப்புகள்) மாணவர்கள் கூட்டமாக இணைந்து சஞ்சிகையொன்றை தாயரிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் தயாரித்த சஞ்சிகைகளை அப்பாடசாலை வலயத்திற்கு 2011.08.01 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
வலயங்களிலிருந்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறந்த முதல் மூன்று சஞசிகைகளை மாகாணத்திற்கு
2011.09.15 ஆந் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுவதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதன் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு வலய மட்டத்தில் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago