Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
2010 தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிப்படுத்திய வீர வீராங்கனைகளை பாராட்டி கௌரவிக்கும் 'கலர்ஸ்டே' நிகழ்வு, நாளை 7ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு நடைபெற உள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமை தாங்கவுள்ளார்.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம கலந்து கொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர்களான, விமலவீர திஸாநாயக்க, டி.நவரட்ணறாஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் விஸேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய மட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிப்படுத்திய 67 வீர வீராங்கனைகள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன் சர்வதேச கபடி போட்டியில் 3ஆம் இடம்பெற்ற கிழக்கு கபடிக்கழகமும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.
43 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
6 hours ago
22 Dec 2025