Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
கடந்த 14 வருடங்களுக்கு (26) முன்னால் இலங்கையில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் காரணமாக மூதூரில் பாதிக்கப்பட்டு இதுவரை சுனாமி வீடுகள் கிடைக்கப்பெறாத மக்கள் சார்பாக புதன்கிழமை (26) மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம் இரண்டு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு மற்றும் மூதூர் ஐக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய அமைப்புகள் சுனாமியினால் பாதிக்கப்பட்டு, இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாத 63 குடும்பங்களுக்கும் அரசாங்கம் வீடுகளைப் பெற்றுத் தருமாறு கோரி, இம்மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்போது மகஜரை பெற்றுக் கொண்டு உரையாற்றிய மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக், 14 வருடங்கள் கழிந்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கு இதுவரை வீடுகள் கிடைக்கப் பெறாததையிட்டு தான் மிகவும் கவலை அடைவதாகவும், பொறுப்புவாய்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்தியதை எண்ணியும், பிரதேச செயலாளர் என்ற வகையில் வெட்கப்படுவதாகவும், ஆனாலும் தற்போதைய மூதூர் பிரதேச செயலாளர் என்ற வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள் மட்டத்தில் அறிவித்து, அவர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகபை் பெற்று, அடுத்த வருடம் 2019.12.26 ஆம் திகதிக்கு முன்னர் சுனாமி வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேனென்றும் அவர் வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago