Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் தோப்பூர் பிரதேசத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களில் தற்போது வசித்து வரும் வீடற்ற 80 குடும்பங்களுக்கு அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை டெரோ சமூக அமைப்பின் தலைவர் ஏ.ஜே.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வீட்டுத்திட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர்,பாலத்தோப்பூர்,இக்பால் நகர்,அல்லை நகர்,ஆஸாத்நகர்,ஜின்னா நகர்,பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராமங்களில் வாழும் தமிழ்,முஸ்லிம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அமைக்கப்படவுள்ள வீட்டின் பெறுமதி 350,000 ரூபாய் பெறுமதியானதென முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.மகரூப் தெரிவித்தார்.
இதன்போது,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், பிரதம அதிதயாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பைஸர் கான்,மூதூர் பிரதேச செயலகத்தின் நிறுவாக உத்தியோகத்தர் எம்.நிதவுஸ்,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் டீ.அப்துல் சலீம்,நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.முனீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டுத்திட்டம் 3 மாதகாலத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago