ஒலுமுதீன் கியாஸ் / 2017 நவம்பர் 20 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா கல்வி வலயத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால், இந்த இமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் ஆறு வருடங்கள் சேவையாற்றியோர் இடமாற்றத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அல் இர்பான் மகா வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய எம்.எஸ்.
நசூர்தீன், ரீ.பி. ஜாயா வித்தியாலயத்துக்கும் ரீ.பி. ஜாயா வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய எம்.எம்.எம். முஸம்மில், அப்துல் மஜீத் வித்தியாலயத்துக்கும் அப்துல் மஜீத் வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய வி. வசூர்தீன், அல் இர்பான் மகா வித்தியாலயத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் இந்த இடமாற்றம் தொடர்பாக மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago