Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி, வடமலை ராஜ்குமார்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி, படுகாட்டுவெட்டைக் கிராமத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான 197 ஏக்கர் நெற்காணியில் பெரும்பான்மையினத்தவர் அத்துமீறி வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதைக் கண்டித்து அக்காணிச் சொந்தக்காரர்கள் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1959ஆம் ஆண்டு முதல் படுகாட்டுவெட்டை நெற்காணியில் சிறுபான்மையின மக்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவந்தனர். இதன் பின்னர், இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில், 2009ஆம் ஆண்டு முதல் இந்த நெற்காணியில் பெரும்பான்மையினத்தவர் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பில் பலமுறை உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்தியபோதிலும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென காணிச் சொந்தக்காரர்கள் தெரிவித்தனர். தங்களின் நெற்காணியை மீட்டுத் தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் தெரிவிக்கையில், குறித்த நெற்காணியில் இரண்டு தரப்பினரையும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதை தடைசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளதுடன், இப்பிரச்சினைக்கு இரண்டு வாரகாலத்தினுள் தீர்வு காணப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்' என்றார்.
இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த மூதூர்ப் பிரதேச செயலாளர், இந்தப் காணிப்பிரச்சினை சம்பந்தமாக 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறினார்.



2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago