Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி
மூதூர்-இரால்குழி பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி 9 கிலோ கிராம் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றம் 30,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதேவேளை,குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பிரிதொரு நபரின் மோட்டார் சைக்கிள் என்பதால் மோட்டார் சைக்களில் உரிமையாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை ஒன்றில் விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன்,ஜனவரி மாதம் 1ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மூதூர் நீதிமன்ற நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago