2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மருந்தகம் நடத்தியவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - அநுராதபுர சந்தியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் சுகாதாரத் திணைக்களஅதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையின் போது அனுமதிப்பத்திரமின்றி மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த இலக்சான் ஒத்தாசியஸ் செல்லையா (28) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சுகாதார திணைகள அதிகாரிகளின் உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,  காலாவதியான திகதியில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் 'எனொக்ரா' என்றழைக்கப்படும் 40 பெட்டிகளையும் ஊக்கமருந்து 164 பக்கெட்டுக்களையும் கைப்பற்றியதாக உப்புவெளி பொலிஸார்  தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, இன்று புதன்கிழமை (09) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .