Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர்த்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தகவல் ஒளிபரப்புப் பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியுமான மர்ஹும் அப்துல் மஜீதின்; 28ஆவது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ளதால், அதனை கிண்ணியா முற்போக்கு வாலிப மன்றம் நடத்த முன்வந்துள்ளது.
அந்த வகையில் மூதூர், கிண்ணியா வலயப் பாடசாலை மாணவர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு 06 தொடக்கம் 09வரை ஒரு பிரிவாகவும் 10 தொடக்கம் 13வரை இரண்டாம் பிரிவாகவும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கான அறிவுறுத்தல் அடங்கிய விண்ணப்பம் பாடசாலை அதிபர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 20.10.2015ஆம் திகதிக்கு முன் ஜனாப் ஆ.ளு.அமானுல்லா (ஓய்வு பெற்ற அதிபர்) மூதூர் - 2 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் மு.ஆ.ரஹீம் கேட்டுக்கொண்டுள்ளார்
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026