2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

அமெரிக்க அதிகாரிகள் திருகோணமலைக்கு விஜயம்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் குழுவொன்று, திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்து, அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, தற்கால அரசியல், மனித உரிமைகள் விவகாரம் குறித்துக்  கலந்துரையாடி வருகின்றது.

இதனடிப்படையில், தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளை, அக்கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று (13), அக்குழு சந்தித்துக் கலந்துரையாடியது.

இந்தச் சந்திப்பில், அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான விசேட அதிகாரிகளான R.E. Shantheep Cross, Anthony F Renzulli ஆகியோரும், தமிழரசுக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், நகரசபைத் தலைவர் ந.இராசநாயகம், பட்டணமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளர் ஜி.ஞானகுணாளன், இரா சம்பந்தனின் பிரத்தியேகச் செயலாளர் குகதாசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த தூதுக் குழுவினரிடம், கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பு விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக, பட்டணமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.

அத்துடன், சமகால அபிவிருத்தி, மனித உரிமைகள் மேம்பாடுகள் குறித்தும் இச்சந்தர்ப்பத்தில்  விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X