Freelancer / 2021 ஜூன் 27 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகனங்களில் சாரதிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விபத்து இன்று (27) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து கிண்ணியா நோக்கி சென்ற 1990 அம்பியூலன்ஸ் வண்டியும், கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த லொறி ஒன்றும் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 1990 அம்பியூலன்ஸ் சாரதிக்கும், லொறியின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
M
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026