Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்,வி.சுகிர்தகுமார்,வடமலை ராஜ்குமார்
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் இதன்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் பிரச்சினையை தெரியப்படுத்தி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளை, செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான க.துரைரெட்னசிங்கமும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட நியமனங்களை பரிசீலித்து, இதன் படி ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்வதுடன், இனிவரும் காலத்தில் இவ்வாறான புறக்கணிப்பு இடம்பெறாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago