Princiya Dixci / 2021 மார்ச் 22 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரச காணிகளை கையகப்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மட் கனி தெரிவித்தார்.
கிண்ணியா பகுதியில் கரைச்சை பகுதிகளை கிரவல் இட்டு, அரச காணிகளை கையகப்படுத்துவதாக குறித்த இடத்துக்கு நேற்று (21) மாலை விஜயம் மேற்கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா பகுதியில் முறையற்ற விதத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கிண்ணியா எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்னால் செல்லும் வீதியில் உள்ள கரைச்சை பகுதியானது உப்பு உற்பத்தி செய்யப்படும் அரச காணியாகும். ஆங்காங்கே வன பரிபாலன சபையால் எல்லை கற்களும் இடப்பட்டுள்ளன. இவ்வாறு கற்கள் இடப்பட்ட பகுதிகளை கிரவல் இட்டு காணிகளை பிடிப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும்” என்றார்.
மேலும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவித்து வருவதோடு, கிராம அதிகாரிகள் ஊடாகவும் இதனைத் தெரியப்படுத்தி வருகின்றோம். இவ்வாரான சட்ட விரோத செயற்பாட்டுக்கெதிராக பொலிஸ் நிலையத்திலும் மாவட்ட செயலாளருக்கும், ஜனாதிபதிக்கும் உடனடியாக அறிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025