2025 மே 15, வியாழக்கிழமை

அரச காணி சுவீகரிப்பு: மூவர் கைது

Editorial   / 2021 ஜூலை 07 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா குரங்கு பாஞ்சான் பகுதியில் அரச காணியை வெட்டி சுவீகரிப்பில் ஈடுபட்ட குற்றச்  சாட்டின் கீழ், நேற்று (07) நண்பகல் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா  பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், காட்டு மரங்களை வெட்டி  துப்பரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சூரங்கல். இராணுவ முகாமுக்கு கிடைக்கப் பெற்ற. தகவலின் பேரிலேயே, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வனபரிபாலன அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். அவ்வதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 60 , மற்றும் 44, 42 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். (ஏ.எம்.ஏ.பரீட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .