Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நொச்சிகுளம், சாந்திபுரம் மற்றும் ரொட்டவௌ பகுதிகளில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில்; குடியிருக்காத வீடுகளை வீட்டு வசதியின்றியுள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மொறவௌ பிரதேச செயலாளர் டபிள்யூ.வாத்திய விஜயந்த தெரிவித்தார்.
நொச்சிகுளம், சாந்திபுரம் மற்றும் ரொட்டவௌ பகுதிகளில் தலா 25 வீடுகள் படி மொத்தமாக 75 வீடுகள் யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக 2006ஆம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்டன. இருப்பினும், 10 வீடுகளில் மாத்திரமே மக்கள் குடியிருக்கின்றனர்.
மேற்படி வீடுகளில் உரியவர்கள் குடியிருக்காமையினால் பல வீடுகள் பாழடைந்து வருவதுடன், அங்கு சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்துவந்த தங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லையெனவும் அந்த மக்கள் கூறினர்.
இது தொடர்பில் மொறவௌ பிரதேச செயலாளரிடம் இன்று புதன்கிழமை கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இது தொடர்பில் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட வீடுகளில் குடியிருக்காமல் பாதுகாப்பற்ற விதத்தில் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago