Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 23 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தப் புடையன் எனும் பாம்பின் கடிக்கு உள்ளாகிக் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஏ.எல்.பாஜீர் (வயது 55) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், தோப்பூர் தாயிப் நகரிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பற்றைக்குள் மறைந்திருந்த இரத்தப் புடையன் எனும் விஷம் கொண்ட பாம்பு அவரை, செவ்வாய்கிழமை தீண்டி அவர், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையிலிருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தோப்பூர் பிரதேச பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, நகரப் புரங்களை விட கிராமப் புறங்களிலேயே விச ஜந்துங்களின் நடமாட்டம் அதிகமாகும்.
ஆனால், விஷ ஜந்துக்கள் தீண்டினால் போடப்படுகின்ற ஊசி கிராமப் புற வைத்தியசாலைகளில் காணப்படுவதில்லை.
இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டியவர்களை, நகர் புறங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கிடையில் விஷத்தால் தீண்டியவர்கள் விஷம் ஏறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கிராமப்புற வைத்தியசாலைகளில் விஷ ஊசிகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
6 hours ago