2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசி திருடியவர்களுக்கு பிணை

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 59ஆம் கட்டைப் பகுதியில் வீடொன்றில் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியொன்றைத் திருடிய இரண்டு இளைஞர்களையும் அந்த அலைபேசியை கொள்வனவு செய்த அலைபேசி கடை உரிமையாளர் ஒருவரையும் தலா 2 சரீரப் பிணையிலும் 1 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் செல்வதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மூதூர் நீதீவான் ஐ.என்.றிஸ்வான் இன்று (31) உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அலைபேசி காணாமல் போனதாகவும் இச்சம்பவத்தில் இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறித்த நபர் மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் திருடிய அலைபேசியை கொள்வனவு செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .