2025 மே 23, வெள்ளிக்கிழமை

அலைபேசி,புகைப்படக்கருவி, பணத்தை திருடியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

திருகோணமலை பிரதேசத்தில் சுற்றுலா பிரயாணிகளின் பெறுமதியான நான்கு கையடக்க தொலைபேசி, புகைப்படக்கெமரா மற்றும் எட்டாயிரம் ரூபாய் பணம் போன்றவற்றைத் திருடிய முச்சக்கரவண்டிசாரதியை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று திங்கட்கிழமை (18)உத்தரவிட்டார்.                           

திருகோணமலை, மரத்தடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                          

திருகோணமலை பிரதேசத்தில் முக்கிய  பகுதிகளை பார்வையிடுவதற்காக மூன்று இளைஞர்கள் திருகோணமலைக்குச் சென்று முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்குச் எடுத்துச் சென்று அந்த இடங்களை பார்க்கச் சென்ற நிலையில், நான்கு அலைபேசிகள், பெறுமதியான புகைப்படக் கருவி, பணம் போன்றன திருட்டுப் போயுள்ளன.

இது தொடர்பில் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, குறித்த முச்சக்கரவண்டி சாரதியை ஞாயிற்றுக்கிழமை (17)கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.                         

           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X