Princiya Dixci / 2015 நவம்பர் 08 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் 101ஐ தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (08) உத்தரவிட்டார்.
கந்தளாய், ரஜஎல சந்தியில் வைத்து 18 மற்றும் 20 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை (07) இரவு கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்களில் ஒருவருக்கு, மூன்று திருட்டுக் குற்றச்சாட்டு வழக்குகள் கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலேயே மீண்டும் இக்குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கந்தளாய், முள்ளிப்பொத்தானை மற்றும் பேராறு பிரதேசங்களில் இடம்பெற்ற கடையுடைப்பு சம்பவங்களுடன் இச்சந்தேகநபர்கள் இருவருக்கும் தொடர்பிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago