2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அலைபேசியைத் திருடிய சிறுவன்: சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முஹீத் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன், கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் 20,000 ரூபாய் பெறுமதியான அலைபேசியொன்றைத் திருடியதாக கடை உரிமையாளர், சீனக்குடா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட சீனக்குடா பொலிஸார், குறித்த சிறுவனை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .