2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அலுமாரி உடைத்து கொள்ளை

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னலை உடைத்து வீட்டினுல் நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 52 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என, திருடியுள்ளதாக, குறித்த வீட்டு உரிமையாளரினால், இன்று திங்கட்கிழமை (31) காலை மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளர் நித்திரை விளித்து, நேற்று அதிகாலை பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு அலுமாரிக் கதவுகளும் திறந்து காணப்பட்டுள்ளன.இதனையடுத்து பணம் வைக்கப்பட்டிருந்த அலுமாரியை பார்த்த போது, பணம் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .