ஒலுமுதீன் கியாஸ் / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை, வெள்ளை மணல் ஆகிய பகுதிகளில், அளவை, நிறுவை உபகரணங்களைச் சரிபார்த்து முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள், சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பி. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்படி, நாளை (10) நாளை மறுதினம் (11) புல்மோட்டை பிரதேச சபை உப அலுவலகத்திலும் இம்மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களில், வெள்ளை மணல் பிரதேச சபை உப அலுவலகத்திலும் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரையும் அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரை பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள், கமநல சேவைத் திணைக்களங்கள், வங்கிகளில் உபயோகிக்கும் சகல அளவை, நிறுவை உபகரணங்களையும் சரிபார்த்து முத்திரையிட்டு, வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை சட்ட ரீதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
முத்திரை இடப்படாது, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது,1995ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026