Freelancer / 2022 ஜூன் 09 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
தூரப் பகுதிகளிலிருந்து வருகைதந்து, மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக, இன்று (09) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையின் அதிகரிப்பு, பிராயாணத்தின்போது ஏற்படும் அசௌகரியம் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டோர், தமது பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான இடமாற்றத்தையோ அல்லது தற்காலிக இணைப்பையோ பெற்று தருமாறு வழியுறுத்தியிருந்தனர்.
அதன்பின்னர், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்குக் பேரணியாகச் சென்று, வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீமிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
17 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago