2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியார் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தீஷான் அஹமட்   / 2019 ஜனவரி 17 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதருமாறு வலியுறுத்தியும், மாணவர்களின் இடைவிலகலால் ஏற்படும் இளம் வயதுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துமாறு தெரிவித்தும், வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று (17) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்ததோடு, இதில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலைக்கு 22 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 15 ஆசிரியர்கள்களே கடமையாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

சுலோகங்களை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அவ் இடத்துக்கு வருகை தந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நவரட்ணராசா கரிகரகுமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை, ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X