2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,  வடமலை ராஜக்குமார்

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில் பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று (30) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில், திருகோணமலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானம்,கணிதம்  மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு 1,134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1,502 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும்  கோரப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 299 ஆசிரியர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தணடாயுதபாணி, வீதி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேவீர கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்தன என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .