2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும்

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமென திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஜெ.பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கு வட மாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் அநேகமான பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்பட்டும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் 2008ஆம் ஆண்டு இந்த கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டிலிருந்து டிப்ளோமாதாரிகள் கற்கை நெறியை பூர்த்தி செய்து வௌியேறியுள்ளதாகவும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின்  பிரதி பணிப்பாளர் ​ஜெ.பிரதீபன் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி பயிற்சியை முடித்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .