Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 06 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
நோன்பு பெருநாளைக்காக துணி, ஆடை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற புடவைக் கடை உரிமையாளர்கள் பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளுமாறு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம்.எம்.அஜித் அறிவித்தல் விடுத்துள்ளார்.
- தங்களது ஆடைக் கடைகளுக்கு முன்னால் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
- கடைகளுக்கு முன்னால் சுகாதார வழிமுறைகளை மக்களை கடைப்பிக்கச் செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமித்தல்.
- ஆடைகளை விற்பனை செய்பவர்கள் முகக்கவசம், கையுறைகளை கட்டாயம் அணிந்திருத்தல்.
- முகக்கவசம் அணிந்தவர்களை மாத்திரம் கடைகளுக்குள் அனுமதித்தல்.
- கடைகளுக்கு வரும் மக்களுக்கிடையில் சமூக இடைவெளியை கட்டாயம் பேணல்.
- சிறிய கடையாயின் ஒரே நேரத்தில் 5 நபர்களையும் பெரிய கடையாயின் 10 நபர்களையும் மாத்திரம் அனுமதித்தல்.
- கொள்வனவுக்கென, ஒரு வாடிக்கையாளருக்கு 20 நிமிடங்கள் மாத்திரம் கால அவகாசம் வழங்குதல்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பேணி நடக்காத ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அவர் மேலும் அறிவித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 Sep 2025